ஊரடங்கால் இந்தியாவின் பெட்ரோலியத் தேவை 70 சதவீதம் குறைந்துள்ளது

ஊரடங்கால் இந்தியாவின் பெட்ரோலியத் தேவை எழுபது விழுக்காடு குறைந்துள்ளது.

பெட்ரோலியப் பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

Advertisements

முழு ஊரடங்கு கடைப்பிடிப்பதால் போக்குவரத்து முடங்கி, தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் இந்தியாவின் பெட்ரோலியப் பொருட்கள் தேவை 70 விழுக்காடு குறைந்துள்ளது.

பேரல் அளவில் கணக்கிட்டால் ஒரு நாளைக்கு 31 லட்சம் பேரல் அளவுக்குத் தேவை குறைந்துள்ளது.

இதனால் ஒன்றரைக் கோடி பேரல் பெட்ரோலியப் பொருட்கள் கிடங்குகளில் கூடுதலாக இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

வழக்கமான தேவையில் முப்பது முதல் நாற்பது விழுக்காடு வரையிலான பொருட்களே விற்பனையாவதாக இந்தியன் ஆயில் நிறுனத் தலைவர் சஞ்சீவ் சிங் தெரிவித்துள்ளார்.

Advertisements
Advertisements

Related posts