இந்தியாவில் ஒரே நாளில் 20,903 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 20,903 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 20,903 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  அதேபோல், நேற்று ஒருநாளில் மட்டும் 379 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், இதுவரை கொரோனா தொற்றால் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 18,213 ஆக உயர்ந்துள்ளது.

Advertisements

இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 6,25,544 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா தொற்றில் இருந்து 3,79, 892 பேர் குணமடைந்துள்ள நிலையில், 2,27,439 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்தெரிவித்துள்ளது

Advertisements

Related posts