திருநெல்வேலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் குணமாகி வீடு திரும்பினார்

திருநெல்வேலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் குணமாகி வீடு திரும்பினார்

திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட முதல் நபர் குணமாகி வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

Advertisements

துபாயில் இருந்து நெல்லை திரும்பிய அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதும் அவருக்கு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் கொரோனா தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சைக்குப்பின், கொரோனா சோதனையில் நெகடிவ் ரிசல்ட் வந்ததையடுத்து, பல கட்ட சோதனைகளுக்குப்பின்னர் அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

இன்று அவர் வீட்டுக்கு அனுப்பபட்டாலும் வீட்டில் 14 நாள் தனிமைப்படுத்தபடுவார் என்று மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

Advertisements

Related posts