அமெரிக்காவில் ஒரே நாளில் 2,165 பேர் பலி, மொத்தம் 34,641 பேர் பலி

அமெரிக்காவில் கொரோனா தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 2 ,165 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 35,000 நெருங்கியுள்ளது.

சீனாவில் முதலில் பரவிய கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த கொடிய வைரசுக்கு தற்போதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் மனித பேரழிவு ஏற்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் 21,810,43 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisements


அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் 6,77,482 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 29,479 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 2,165 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,608 ஆக அதிகரித்துள்ளது.

Advertisements