கொரோனா தடுப்பூசியை முதன் முதலில் செலுத்தி கொண்ட பெண் எப்படியிருக்கிறார்?

கொரோனா தடுப்பூசியை முதன் முதலில் செலுத்தி கொண்ட பெண் எப்படியிருக்கிறார்?

கொரோனா வைரஸுக்கு கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியை முதன் முதலில் செலுத்தி கொண்ட பெண்ணின் தற்போதைய நிலை குறித்து தெரியவந்துள்ளது.

Advertisements

அமெரிக்காவின் Seattle நகரில் உள்ள கைசர் நிரந்தர வாஷிங்டன் சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தில் தான் இது தொடர்பான பரிசோதனை நடைபெற்று வருகிறது.

அதன்படி கடந்த மார்ச் மாதம் 16ஆம் திகதி Jennifer Haller (44) என்ற பெண் தான் முதன் முதலில் இந்த தடுப்பூசி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

தடுப்பூசியை செலுத்தி கொண்டு ஒரு மாதம் ஆகவுள்ள நிலையில் அவர் கூறுகையில், இந்த தடுப்பூசியை வழக்கமான காய்ச்சலுக்கான தடுப்பூசிகளுடன் ஒப்பிடுவேன், ஆனால் இந்த பரிசோதனைக்கு ஒப்புகொள்வதில் அபாயங்கள் உள்ளது.

அதே நேரம் இந்தப் பரிசோதனையின்போது கொரோனா வைரஸ் பயன்படுத்தப்படாததால் எந்த இடத்திலும் நான் அதனால் பாதிக்கப்பட போவதில்லை . ஊசி போட்டு கொண்ட முதல் நாள் என் உடல்நிலையில் வெப்ப நிலை அதிகரித்தது. பின்னர் அது சாதாரண நிலையை அடைந்தது.

Advertisements

இப்போது என் உடல்நிலையில் எந்த பிரச்சனையும் இல்லை, நான் நன்றாகவே உள்ளேன். அடுத்த வாரத்தில் எனக்கு இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

மேலும் 2021ஆம் ஆண்டு வசந்த காலம் வரை நான் மருத்துவர்களால் கண்காணிக்கப்படுவேன் என கூறியுள்ளார்.

Advertisements

Related posts