மருத்துவ தம்பதிகளின் ‘பாசப் பரிமாற்றம்’ : கொரோனா யுத்தத்தில் நெகிழ்ச்சி

அமெரிக்காவில் செவிலியர் தம்பதி கொரோனா ஒழிப்பு பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டதால், அவர்களின் சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்தவர்கள் மைன்டி பிராக் (38) மற்றும் பென் கேயர் (45). இவர்கள் இருவரும் அங்குள்ள நர்ஸிங் கல்லூரியில் மயக்க மருந்தியல் பிரிவில் 2007-ஆம் ஆண்டு படித்தனர்.

Advertisements

இருவரும் கல்லூரியில் ஏபிசிடி வரிசைபடியே உட்கார வைக்கப்பட்டதால் பிராக்கிற்கு அடுத்த கேயர் அமர்ந்திருந்தார். அப்போது இருவரும் நண்பர்களாகி, அதன் பின் காதலித்து 2015-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

அவர்கள் தற்போது டாம்பாவில் உள்ள மருத்துவமனையில் சுகாதார பணியாளர்களாக பணியாற்றி வருகிறார்கள்.

இருவரும் இணைந்து கொரோனாவுக்கு எதிராக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் இருவரும் பணி ஓய்வின் போது இவர்கள் இருவரும் சந்தித்து கொள்ளும் புகைப்படம் வைரலாகியது.

Advertisements

கொரோனா வார்டில் பணியாற்றுவதால் பாதுகாப்பு கவசங்களுடன் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்வது போன்று இருந்தது.

இதுகுறித்து கேயர் கூறுகையில் நாம் அனைவரும் தற்போது ஒரே விஷயத்தை நோக்கி செல்கிறோம். இது காதல் மற்றும் நம்பிக்கையின் சின்னம் என்று கூறியுள்ளார்.

பிராக் கூறுகையில் இதில் என்ன முக்கியம் என்றால் நாங்கள் எப்போதும் ஒற்றுமையாக இருப்போம். ஒரே இடத்தில் வேலை பார்க்கிறோம். ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்போம். இதை நானும் பென்னும் மட்டும் செய்யவில்லை. மனித இனமே செய்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ள பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கொரோனாவால் பாதித்தவர்கள், அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு வாயில் குழாயை செலுத்தி அவர்களை சுவாசிக்க செய்வர்.

கொரோனா பாதிப்பு அந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு அதிக வாய்ப்பிருக்கும் நிலையில் தம்பதி இருவரும் சேர்ந்து இந்த ஆபத்தான பணியில் இருப்பது பலரிடம் பாராட்டை பெற்று வருகிறது.

Advertisements