லாக்டவுனில் உடல் எடை குறைக்கணுமா? இதோ உங்களுக்காகவே புரோட்டீன் டயட்!

லாக்டவுனில் உடல் எடை குறைக்கணுமா? இதோ உங்களுக்காகவே புரோட்டீன் டயட்!

உணவில் அதிக புரோட்டீன் உணவுகளைச் சேர்ப்பதால் எடை குறைவதோடு, அதிக உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.

Advertisements

புரோட்டீன் டயட் நமது உடல் எடை வேகமாக குறைய உதவுவதுடன், உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளையும் வழங்குகிறது. அதிக புரோட்டீன் கொண்ட உணவுகள் பற்றி இப்போது பார்க்கலாம்.

உடல் எடை

உடல் எடை அதிகமாக இருந்தால் இதய நோய், நீரிழிவு என பல இன்னல்களைச் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். உடல் எடைதான் பல நோய்களுக்கு மூல காரணமாக இருப்பது அனைவரும் அறிந்ததே. எடையைக் குறைக்க என்ன முயற்சி செய்தாலும் பலருக்கு அதனைல் பலன் கிடைப்பதில்லை. ஆனால், அவர்களுக்கும் இந்த ஹை புரோட்டீன் டயட் ஒரு வரப்பிரசாதம். இந்த உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் எடை குறைவது வேகமாக நிகழும். நீங்கள் தினமும் கொஞ்சம் நேரம் உடற்பயிற்சி செய்தாலே போதும்.

புரோட்டீன் அதிகம் கொண்ட உணவுகள்

Advertisements

பீன்ஸ்

பீன்ஸில் அதிக புரோட்டீன், நார்ச்சத்து மற்றும் ஆண்டி ஆக்சிடன்கள் உள்ளன. இது உடல் எடையைக் குறைக்க உதவும். ஒருவேளை உணவாகக்கூட கை நிறைய பீன்ஸ் சாப்பிடலாம். அதனுடன் மற்ற சில காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.

காலிபிளவர்

காலிபிளவரில் உள்ள தைம் என்ற பொருள் குறிப்பாக உடல்  பருமனைக் குறைக்க உதவுகிறது. அதுமட்டும் இன்றி புரோட்டீன், நார்சத்து, மெக்னீஷியம் என பல சத்துகள் இதில் உள்ளன.

முட்டை

உடல் எடையைக் குறைக்க முட்டை டயட் என தனியாக ஓர் உணவு முறையே உள்ளது. நல்ல கொழுப்பு மற்றும் உடலுக்கு தேவையான ஊட்டத்சத்துகள் இதில் அதிகம். முட்டை சாப்பிட்ட பின் அதிக நேரம் பசி உணர்வு ஏற்படாது.

சால்மன்

ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் கொண்ட சால்மன் மீன், நமது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்வதுடன் கொழுப்புகளைக் கரைக்க உதவுகிறது. உணவில் இதைச் சேர்ப்பதால் எடை இழப்பு அதிகரிக்கும்.

விதைகள் (Nuts)

தினமும் விதைகள் (நட்ஸ்) சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் கிடைப்பதுடன், இதய நோய் ஏற்படாமல் தடுக்க உதவும். உண்மையில் விதைகளில் உள்ள சத்துகள் உடல் எடையை அதிகரிக்காது. உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த தீனி. அதேபோல சூரியகாந்தி விதைகள், பூசணி விதைகள் ஆகியவற்றை சாப்பிடுவதால் உடல் இன்னும் கட்டுக்கோப்பாக இருக்கும்.

Advertisements