வனிதாவின் மூன்றாவது திருமணம்.. இணையத்தில் நெட்டிசன்கள் செய்த மரணகலாய் வீடியோ

நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர் பால் திருமணம், குடும்பத்தினர் மத்தியில் நடந்தது. தமிழ் சினிமாவில், முதல் படத்திலேயே, விஜய்க்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர், நடிகை வனிதா விஜயகுமார்.

இவர், விஜயகுமார் – மஞ்சுளா தம்பதியின் மூத்த மகள். அதன் பின், பல படங்களில் நடித்தாலும், முன்னணி நடிகையாக முடியவில்லை.

Advertisements

இரண்டு திருமணங்களை சந்தித்த அவர், விவாகரத்து பெற்றார். பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் சொத்து பிரச்னையை சந்தித்த இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார்.

அதன் பின்னர் தற்போது, ‘யு – டியூப்’ சேனல் ஒன்றில், சமையல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இவருக்கு உதவியாக இருந்த பீட்டர் பாலை, தன் மூன்றாவது கணவராக வனிதா தேர்ந்தெடுத்தார்.

இந்நிலையில், வனிதாவின் மகள்கள் சம்மத்துடன் வனிதா வீட்டில், இருவருக்கும் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடந்தது.

இதுகுறித்த வீடியோ காட்சிகளும், புகைப்படங்களை இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பலரும் திட்டி தீர்த்து வந்தனர்.

Advertisements

இந்த நிலையில், மூன்றாவது திருமணத்தின் வீடியோ காட்சியினை வைத்து நெட்டிசன்கள் மரண ட்ரோல் காட்சியினை வெளியிட்டு இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்

Advertisements

Related posts