இந்தியாவில் உ.பிமாநிலத்தில் கோயிலுக்குள் சென்ற தாழ்த்தப்பட்ட வாலிபர் சுட்டுக்கொலை?

அமெரிக்காவில் கருப்பர் ஒருவர் கொல்லப்பட்டார் அமெரிக்காவை பற்றி எரிகிறது?ஆனால் இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலம்தாழ்த்தப்பட்ட நபர் ஒருவர் கோவிலுக்குள் சென்று வழிபட்டார் என்பதற்காக உயர் சாதியினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஆனால் இங்கு எந்த சலனமும் எந்தவித அசைவும் இல்லை ஏன்? ஜாதி இல்லையடி பாப்பா என்று பாடம் நடத்தும் இந்தியாவில் இதுபோன்ற ஜாதிக் கொடுமைகள் தொடர்ந்துகொண்டு தான் இருக்கின்றன.

Advertisements

உத்தர பிரதேசத்தின் அம்ரேகா மாவட்டத்தில் டோம் கோரா கிராமத்தைச் சேர்ந்தவர் விகாஸ் குமார் ஜாதவ் 17 வயது தாழ்த்தப்பட்ட சமூகத்து சிறுவனான இவர் சில நாட்களுக்கு முன்பு தனது கிராமத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு வழிபட சென்றுள்ளார் அப்போது அவரை கோவிலுக்குள் செல்லக்கூடாது என்று ஜாதி இந்துக்கள் தடுத்துள்ளார்கள்.

எனினும் அவர் தடையை தாண்டி கோவிலுக்குள் சென்று வழிபட்டதால் ஆத்திரமடைந்த ஜாதி வெறியர்கள் விகாஸ் குமார் கோவிலிலிருந்து வெளியே வந்தவுடன் அவரை கடுமையாக தாக்கி இருக்கிறார்கள் இதில் படுகாயமடைந்த விகாஸ் குமாரை அழைத்துக்கொண்டு அவரது தந்தை ஓம் பிரகாஷ் யாதவ் காவல்துறையினரிடம்புகார் செய்தபோது அவர்கள் புகாரை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டனர்.

இதனிடையே விகாஸ் குமாரை கோவிலில் தாக்கியது மட்டுமின்றி கடந்த சனியன்று 06/06/2020 அவர் வீட்டருகே வந்து 4 பேர் கொண்ட கும்பல் விகாஸ் குமாரை வெளியே இழுத்துப்போட்டு துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துள்ளனர்.

இதுபோன்ற ஜாதி வெறி , மத வெறி கொலைகள் கும்பல் கொலைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. உடனடியாக அரசு நிர்வாகம் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்பதே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Advertisements
Advertisements

Related posts