காவல்நிலையத்தை மாமியார் வீட்டோடு ஒப்பிட்டு டிக்டாக் வீடியோ- இருவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் செம்பட்டிவிடுதி காவல்நிலைய போலீசார் வெள்ளாளவ் விடுதியைச் சேர்ந்த பாலைய என்ற வாலிபர் முக கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்ததால் போலீசார் அவரின் வாகனத்தை பறிமுதல் செய்தனர். . ஜாமீன் கையெழுத்து போட்டுவிட்டு வெளியே வந்த வெற்றிவேல் டிக் டாக் வீடியோ ஒன்றை பதிவு செய்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அந்த காவல்நிலையத்தை மாமியார் வூட்டோடு ஒப்பிடும் வகையில் வசனங்கள் இடம்பெற்று இருந்தது.

இதனை தொடர்ந்து காவல் நிலையத்தை தவறாக சித்தரித்து டிக் டாக் வீடியோ பதிவிட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்ட நெருஞ்சிப்பட்டியைச் சேர்ந்த வெற்றிவேலையும் வீடியோ பதிவு செய்த அவரது நண்பர் மகேந்திரன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisements
Advertisements

Related posts