இது சாம்பிள் தான் இன்னும் நிறைய அறிவிப்புகள் வரும் – மத்திய நிதிதுறை இணை அமைச்சர் அனுராக் தாகூர்

கொரோனாவால் ஏற்ப்பட்ட பொருளாதார சரிவுகளை சரி செய்ய மத்திய அரசு ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களை அறிவித்தது. இதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.

முதல் கட்டமாக நிறுவனங்களின் செலவை குறைக்கும் வகையில் விதிகளில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. இரண்டாம் அறிவிப்பாக ரூ.1.70 லட்சம் கோடியில் ‘பிரதான் மந்திரி கரீப் கல்யாண்’ தொகுப்பு அறிக்கப்பட்டது. மூன்றவதாக ரூ.20.97 லட்சம் கோடி பொருளாதார ஊக்குவிப்பு நிதி தொகுப்பு அறிவிக்கப்பட்டது.

Advertisements

இதை குறித்து என மத்திய நிதிதுறை இணை அமைச்சர் அனுராக் தாகூர் கூறியதாவது: “இது தற்காலிக நிறுத்தம் தான். தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, ‘தற்சார்பு இந்தியா’ திட்டத்தின் கீழ் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்படும். மக்களின் தொழில் துறை தேவையின் தேவையை மத்திய அரசு அறிந்துள்ளது. சுற்றுலா, விமான போக்குவரத்து, ஓட்டல் போன்றவை உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கிறது.

2020ம் ஆண்டு பொருளாதார சீர்திருத்த ஆண்டாக அமையும். சிறு குறு நிறுவனங்களுக்கான வரையறையை மாற்றியது, நிலக்கரி சுரங்கம், கனிம துறைகள் தாராளமயமானது, இராணுவ தளவாட உற்பத்தியில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரித்தது போன்றவை மிக தைரியமாக எடுக்கப்பட்ட முடிவுகள் தான்.

ஏழைகளுக்கு நேரடியாக பலனளிக்கும் பல திட்டங்கள் அரசு செய்துள்ளது. அதில் சிறு, குறு நிறுவனங்களுக்கான பினையில்லா கடன் வழங்க ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது இத்துறைக்கு ஊக்கமாகவும், வேலை பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும். மக்களிடம் பணபுழக்கம் அதிகரிக்கப்பட்டு பொருளாதரத்தில் நீண்டகால தேவைகளை பூர்த்தி செய்யும்” என கூறியுள்ளார்.

Advertisements