நடப்பாண்டின் முதல் சூரிய கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியும்

நடப்பாண்டின் முதல் சூரிய கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


வரும் 21ம் தேதி முழு சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. பூமி – சந்திரன் – சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. சூரியனின் நடுவில் சந்திரனின் நிழல் விழுவதால் பார்ப்பதற்கு பொன் வளையத்தில் வைரமோதிரம் போல ஜொலிக்கும்.

Advertisements


முழுமையாக ஏற்படும் இந்தக் கிரகணத்தை மத்திய ஆப்பிரிக்கா, காங்கோ, எத்தியோப்பியா, பாகிஸ்தான், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தக் கிரகணம் காலை 9.15 மணிக்கு தொடங்கி பிற்பகல் 03.04 மணி வரை நீடிக்கிறது. வரும் 21ஆம் தேதி நிகழப்போகும் சூரிய கிரகணம் இந்த ஆண்டிலேயே மிக நீண்ட சூரிய கிரகணம் என்றும், வெற்றுக் கண்களால் இதனைப் பார்க்கக் கூடாது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

Advertisements