பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளை ஆபாசமாக வீடியோ எடுத்த கொடூரன்

கடந்த 2003 ஆண்டிலிருந்து தொடர்ந்து பல பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து வந்த சிங்கப்பூரை சேர்ந்த 35 வயது நபருக்கு 2 ஆண்டு 3 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரை சேர்ந்த நபர் அங்குள்ள பல பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளை குளியலறை, உடை மாற்றும் அறை, கழிவறை ஆகிய இடங்களில் ஆபாசமாக வீடியோ எடுத்து வந்துள்ளார். 2016ம் ஆண்டு தன்னுடன் வேலை பார்த்து வந்த சக பெண் ஊழியரை ரகசியமாக வீடியோ எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த பெண்ணிடம் வசமாக சிக்கியுள்ளார்.

Advertisements

தர்ம அடி கொடுத்த அந்த பெண் போலீஸிலும் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை நடந்திய போலீஸார் அவரிடமிருந்த 1400 வீடியோக்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அந்த நபருக்கு 2 ஆண்டுகள் மற்றும் 3 மாதம் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார். இது இப்போது சிங்கப்பூர் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Advertisements

Related posts