ஜூலை 31 வரை சரக்கு ரயில் சேவை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு

ஜூலை 31 வரை பார்சல் ரயில் சேவை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக சரக்கு ரயில் சேவை ஜூலை 31 வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Advertisements

இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:

ஊரடங்கு நீட்டிப்பால் கீழ்க்கண்ட சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை எழும்பூர்-திருவனந்தபுரம் வரையில் இயக்கப்படும் ரயில் (00657),

திருவனந்தபுரம்-எழும்பூர் வரை இயக்கப்படும் ரயில் (00658),

Advertisements

சென்ட்ரல்-எர்ணாகுளம் வரையில் இயக்கப்படும் ரயில் (00653),

எர்ணாகுளம்- சென்ட்ரல் இடையிலான ரயில் (00654) வாரத்துக்கு 3 முறை இயக்கப்படும்

இந்த சிறப்பு சரக்கு ரயில்களின் சேவையானது ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisements

Related posts