திரைப்படங்களில் நடிக்கும் ரோபோக்கள்

ஜப்பான் நாட்டில் உள்ள ஒசாகா பல்கலைக்கழகம் கடந்த 2015 ஆம் வருடத்தில் செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோவை உருவாக்கியுள்ளது.

இந்த ரோபோ 23 வயது பெண்மணியின் உருவத்தை கொண்டுள்ள நிலையில், எரிகா என்று பெயர் சூட்டப்பட்டது.

Advertisements

இந்த செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோவானது, மனிதர்களை அடையாளம் காணுவது, கண்களை சிமிட்டுதல் போன்ற செயல்களை செய்து வந்தது.

மேலும், அழகான குரல், நேர்த்தியான அசைவுடன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தற்போது திரையுலகில் கால்பதிக்க துவங்கியுள்ளது. மனிதர்களுக்கும் – ரோபோக்களுக்கும் இடையேயான டி.என்.ஏ அறிவியல் கதை கொண்ட திரைப்படத்தில் எரிகா நடிக்கவுள்ளது.

இந்த படம் 70 மில்லியன் டாலர் செலவில் உருவாகவுள்ள நிலையில், இந்திய மதிப்பில் இதன் செலவு ரூ.530 கோடி ஆகும்.

Advertisements

இந்த படத்தின் படப்பிடிப்பு ஜப்பானில் துவங்கியுள்ள நிலையில், மீதமுள்ள படப்பிடிப்புகள் அடுத்த வருடத்தின் ஜூன் மாதம் ஐரோப்பாவில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements