வெட்டுக்கிளி பிரியாணி – ராஜஸ்தான் மாநிலங்களில் களைக்கட்டும் விற்பனை…

வெட்டுக்கிளிதான் அடுத்த பிரச்சினையாக நாட்டில் உருவாகும் எனக் கருத்துகள் நிலவி வரும் சூழலில், வெட்டுக்கிளியை வைத்துச் சமையல் தொடங்கப்பட்டுவிட்டது.

வெட்டுக்கிளிகளின் தாக்குதலைச் சமாளிக்க அரசு பல யோசனைகளை வகுத்து வரும் சூழலில் ராஜஸ்தான் உணவகங்களில் வெட்டுக்கிளியைப் பிடித்து பிரியாணி, ஃப்ரை, கிரேவி உள்ளிட்ட உணவு வகைகளைச் சமைத்து விற்பனை தொடங்கப்பட்டுவிட்டது.

Advertisements

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வெட்டுக்கிளிகள் கோடிக் கணக்கில் உருவாகி விவசாயப் பயிர்களை நாசமாக்கி வருகின்றன என்ற செய்தி வெளியானது. இந்த வெட்டுக்கிளிகளை ஒழிக்கும் முயற்சிகளை அரசுகள் முன்னெடுத்துள்ளது.

இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் தார், ஜெய்பூர் போன்ற இடங்களில் உள்ள தனியார் உணவகங்களில் லோகஸ்ட் 65, லோகஸ்ட் மசாலா, லோகஸ்ட் பிரியாணி என விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து ஒரு ஓட்டல் உரிமையாளர் கூறுகையில், ” வெட்டுக்கிளிகளை சமைப்பதற்கு முன் நன்கு சுத்தம் செய்து அதன் கால் இறக்கை போன்றவை நீக்கப்பட்டு சமைக்கப்படுகிறது” என்கிறார். வெட்டுக்கிளிகளில் புரதச்சத்து இருப்பதால் மெக்சிகோவிலும் சீனாவிலும் இதனை சாபிடுவோர் அதிகமாம்.

விவசாய பயிர்களுக்கு பெரும் சவாலாகவும் எதிர்காலத்தில் நாட்டில் உணவுப் பஞ்சத்தையும் ஏற்படுத்திவிடும் என வெட்டுக்கிளிகள் குறித்து ஐநா எச்சரிக்கை விடுத்திருந்தது இந்த நேரத்தில் குறிப்பிடத்தக்கது.

Advertisements

வெட்டுக்கிளிகள் உணவு வகைகள் மிகவும் ருசியாக இருப்பதாக ராஜஸ்தான் பகுதி மக்கள் கூறுகின்றனர். குறிப்பாக, வெட்டுக்கிளிகளில் அதிக புரதச் சத்து இருப்பதாகவும் அறிவுரை வழங்குகின்றனர்.

Advertisements

Related posts