இருவருக்கும் 27 வயது வித்தியாசம் தற்போது கர்ப்பம், 15 வயது சிறுவனின் ஆற்றல்

இத்தாலியை சேர்ந்த மிகப்பெரிய கோடீஸ்வரர் Gianluca Vacchiக்கும் அவரை விட 27 வயது குறைவான மாடல் Sharon Fonseca-க்கும் விரைவில் குழந்தை பிறக்கவுள்ள நிலையில் அது தொடர்பில் இருவரும் பேசியுள்ளனர்.

52 வயதான Gianluca Vacchiம், 25 வயதான Sharon Fonseca-ம் இரண்டாண்டுகளாக தீவிரமாக காதலிக்கும் நிலையில் Sharon தற்போது கர்ப்பமாக உள்ளார்.

Advertisements

இருவருக்கும் 27 வயது வித்தியாசம் உள்ளது சில விமர்சனங்களை கிளப்பியது. இது குறித்து பேசிய Gianluca, எங்களுக்குள் அதிகளவு வயது வித்தியாசம் இருப்பது பற்றி நான் கவலைப்படவில்லை. என்ன தான் என் தாடி வெள்ளை நிறமாக மாறிவிட்டாலும் என்னிடம் 15 வயது சிறுவனின் ஆற்றல் உள்ளது.

எங்களின் காதல் ஆரம்பத்தில் கடினமாக இருந்தது, ஏனெனில் அவள் என்னை மிகவும் கஷ்டப்படுத்தினாள், நான் Sharon-ஐ சந்தித்த இரவில் அவள் என் வலையில் விழுவாள் என்று நினைத்தேன், ஆனால் அது தவறு என பின்னரே எனக்கு தெரிந்தது என கூறியுள்ளார்.

Sharon கூறுகையில், Gianluca ஒரு திறந்த புத்தகம், அவரிடமிருந்து நான் ஒவ்வொரு நாளும் வித்தியாசமான ஒன்றைக் கற்றுக் கொள்ள முடியும். அவரிடம் 15 வயது சிறுவனின் ஆற்றல் உள்ளது உண்மை தான்.

நாங்கள் பெற்றோர்கள் ஆவோம் என எதிர்பார்க்கவே இல்லை, இது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுக்கிறது. எனக்குள் இன்னொரு உயிர் வளர்ந்து வருகிறது, என்ன ஒரு அதிசயம் இது என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Advertisements
Advertisements