ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் கிரிக்கெட், வெளியாகிறது ஐபிஎல் போட்டிக்கான தேதி

கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடக்குமா..? நடக்காதா..? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை நடத்தப்பட்டால், இந்தியர்களை மட்டுமே வைத்து போட்டி நடைபெறுமா..? இந்தியாவில் அல்லாமல் வெளிநாட்டில் தொடர் நடத்தப்படுமா..? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்து வருகின்றன.

அதேவேளையில், அக்டோபர் மாதம் நடக்கவிருந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துவது பற்றியும் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைத்தால் மட்டுமே, இந்த ஆண்டில் ஐபிஎல் கிரிக்கெட்டை நடத்த முடியும் என்ற நிலையில் பிசிசிஐ உள்ளது.

Advertisements

இந்த நிலையில், ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்த பிசிசிஐ தலைவர் மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ரசிகர்கள், அணியின் உரிமையாளர்கள், வீரர்கள் என அனைவரும் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பை எதிர்நோக்கி இருப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பாக விரைவில் பிசிசிஐ முடிவு செய்யும் என கங்குலி அனைத்து மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியை நடத்தாமல் போனால் ரூ. 4000 கோடி வருவாய் இழப்பை பிசிசிஐ சந்திக்கும். எனவே, இதனை ஈடுகட்ட ஊழியர்களின் ஊதியத்தில் கை வைக்க வேண்டிய நிலை ஏற்படும் என பிசிசிஐ தலைவர் கங்குலி ஏற்கனவே கூறியது குறிப்பிடத்தக்கது

Advertisements

Related posts