இந்தியாவில் ஒருலட்சத்தை தாண்டிய கொரோனா வைரஸ்

இந்தியாவில் ஒருலட்சத்தை தாண்டிய கொரோனா வைரஸ்

உலகம் முழுவதும் 48,33,350 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு உலகம் முழுவதும் இதுவரை 3,17,224 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisements

இந்நிலையில் இந்தியாவில் மட்டும் இதுவரை 1,00,161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும் இந்தியாவில் மட்டும் 3,144 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் தற்போதுவரை 58,102 பேர் சிகிச்சையில் உள்ளனர், 38,909பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இதன்மூலம் உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் இந்தியா 11-வது இடத்தில் உள்ளது.

Advertisements