ஸ்பெயின், பிரிட்டன ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளி, இந்தியா 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது

கொரோனா வைரஸ் காரணமாக உலகளவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 75 லட்சத்தை கடந்துள்ளது. இதுவரை சுமார் 4.23 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 38 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் மடும் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால், உலகளவில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

8 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா பாதிப்புகளுடன் பிரேசில் 2-வது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில் 5 லட்சம் பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதியானதால், அந்நாடு 3-வது இடத்தில் உள்ளது.

Advertisements

இந்நிலையில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவிற்கு அடுத்த 4-வது இடத்தில் இந்தியா உள்ளது. இதுவரை 6-வது இடத்தில் இருந்துவந்த இந்தியா தற்போது ஸ்பெயின், பிரிட்டன ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளி, இந்தியா 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 10.956 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,98,141 -ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சராசரியாக தினமும் 9,000 பேருக்கு மேல் நோய்த் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று 10,000-க்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதியாவது இதுவே முதன்முறையாகும். இதேபோல் நேற்று ஒரு நாளில் மட்டும் 396 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 8,498-ஆக உள்ளது. எனினும் நாட்டில் இதுவரை 1,47,195 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

Advertisements

Related posts