இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியுள்ளது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியுள்ளது, இந்தியாவில் 305613 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் மொத்தம் 146726 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர், மொத்தம் 150161 மொத்தம் இந்தியாவில் குணமடைந்து உள்ளனர்.

Advertisements

இந்தியாவில் கொரோனா காரணமாக 8711 பலியாகி உள்ளனர், இந்தியாவில் மகாராஷ்டிராவில் கொரோனா கேஸ்கள் 1 லட்சத்தை தாண்டியுள்ளது.

மகாராஷ்டிராவில் மொத்தம் 101141 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். மகாராஷ்டிராவில் மொத்தம் 51346 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக இருக்கிறார்கள்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் மேலும் 1982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,698-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28ஆயிரத்தை கடந்தது. சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 1477 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,924 ஆக அதிகரித்துள்ளது.

Advertisements

Advertisements

Related posts