தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்தை கடந்தது

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் மேலும் 1,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38,716-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 23 பேர் உயிரிழப்பு; இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 349-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27ஆயிரத்தை கடந்தது. சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 1,407 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,398 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 20-ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் இன்று 1,372 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20,705 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 16,829 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 6,55,675 பாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Advertisements

Related posts