சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மனிதநேயம்

சென்னை காவல் ஆணையரின் மனிதநேயம்

சமீபத்தில் சென்னையின் தி.நகர் காவல் மாவட்டத்திலுள்ள காவல் ஆய்வாளர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதன் மூலம் அவருக்கு உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது!

Advertisements

அவரது உடல்நிலை ஆபத்தான கட்டத்திற்குச் சென்றுவிட்டதால், சிகிச்சை பலனளிக்கவில்லை. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி சோதனையில் முக்கியமான மருந்து ஒன்றை மருத்துவர்கள் கடைசிக்கட்ட முயற்சியாகப் பரிந்துரை செய்துள்ளனர்!

ஒரு தடுப்பூசியின் விலை ரூ.75 ஆயிரமாகும். 3 நாட்கள் இந்தத் தடுப்பூசியைப் போட வேண்டும். இதனால் அவரது குடும்பத்தார் செய்வதறியாமல் திகைத்தனர். இந்தத் தகவல் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கவனத்துக்குச் சென்றது. அவர் தனது சொந்த செலவில் அந்த விலை உயர்ந்த தடுப்பூசியை வரவழைத்து காவல் ஆய்வாளர் உயிரைக் காக்க வழங்கினார்!

உடனடியாக அந்தத் தடுப்பூசி செலுத்தப்பட்டு தற்போது ஆய்வாளர் உடல்நிலை தேறி வருகிறார். காவல் துறையில் தன் கீழ் பணிபுரியும் ஒரு ஆய்வாளருக்குக் காவல் ஆணையர் தனிப்பட்ட முறையில் உயிர் காக்க உதவியது பெரிதும் போற்றதக்கது.

Advertisements

Related posts