கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்த 9 நாடுகள்

உலகளவில் கொரோனா பாதிப்பு 71 இலட்சத்தை எட்டியுள்ள நிலையில், நியூசிலாந்து, தான்சானியா, வாடிகன் உட்பட 9 நாடுகள் கொரோனா தொற்றில்லாத நாடுகளாக திகழ்கின்றன. 

நியூசிலாந்தில் தற்போது வரையிலும் கொரோனா நோயாளிகள் இனங் காணப்படாத காரணத்தால்  7 வாரங்களாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.

Advertisements

இதேபோல் ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் 509 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை தொடக்கம்  தான்சானியா கொரோனா தொற்று இல்லாத நாடாக மாறியுள்ளதாக அதிபர் ஜான் மகுபூலி அறிவித்துள்ளார்.

வாடிகனில் ஜூன் ஆறாம் தேதி   நிலவரப்படி 12 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் அனைவரும் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இதேபோல் ஃபிஜி, மான்டிநெக்ரோ, செசெல்ஸ், செயின்ட் கிட்ஸ் நெவிஸ், திமோர், பப்புவா நியூகினியா ஆகிய நாடுகளும் கொரோனா தொற்று இல்லாத நாடாக மாறியுள்ளன.

Advertisements

Related posts