10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – முதல்வர் பழனிசாமி.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – முதல்வர் பழனிசாமி.

10 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு – முதல்வர் பழனிசாமி.

Advertisements

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி – அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை- 10 ஆம் வகுப்பு தேர்வு தொடர்பாக முக்கிய ஆலோசனை நடைபெற்றது.

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்றும் மாணவர்கள் தேர்வின்றி ஆல் பாஸ் செய்யப்படுவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கொரோனா பரவல் கட்டுக்குள் வராத நிலையில், மாணவர்கள் நலன் கருதி தமிழக அரசு இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

11ம் வகுப்புக்கு விடுபட்ட தேர்வும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார். 12ம் வகுப்பு மீதமுள்ள தேர்வு சூழ்நிலைக்கு ஏற்ப நடத்தப்படும் என்றும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் 80%மும் மாணவர்களின் வருகைப்பதிவுக்கு 20%மும் மதிப்பெண் வழங்கப்பட உள்ளது.

Advertisements

Related posts