ரூ.36 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை.

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 584 ரூபாய் உயர்ந்து 36 ஆயிரம் ரூபாயை தாண்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

ஊரடங்கு அமலில் இருப்பதால் நகைக்கடைகள் மூடப்பட்டு கிடக்கும் போதிலும், கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது.

Advertisements

கடந்த 6ம் தேதியன்று 33 ஆயிரத்து 984 ரூபாயாக இருந்த சவரன் தங்கம், 7 நாள்களில் 2 ஆயிரத்து 120 ரூபாய் அதிகரித்துள்ளது.

சென்னையில் நேற்று 4 ஆயிரத்து 440 ரூபாயாக இருந்த ஒரு கிராம் தங்கம் விலை இன்று 73 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 513-ஆக உயர்ந்துள்ளது.

நேற்று 35 ஆயிரத்து 520 ரூபாயாக இருந்த ஒரு சவரன் தங்கத்தின் விலை இன்று 584 ரூபாய் அதிகரித்து 36 ஆயிரத்து 104 ரூபாயாக உள்ளது.

வெள்ளியின் விலையும் இன்று ஒரு கிலோ 600 ரூபாய் அதிகரித்து 42 ஆயிரத்து 300 ரூபாயாக உள்ளது.

Advertisements
Advertisements