சென்னையில் ஊரடங்கு நேரத்தில் கர்ப்பிணிகளுக்கு இலவச கார் சேவை, வியக்க வைக்கும் இளைஞர்

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் இந்தியா உட்பட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பேருந்து, ஆட்டோ என எந்த வித போக்குவரத்து வசதி சேவைகளும் இல்லாத இந்த நிலையில் சென்னை ஆவடியை சேர்ந்த லியோ ஆகாஷ் ராஜ் (தன்னார்வலர் ) சென்னையிலுள்ள கர்ப்பிணி பெண்களுக்கு இலவசமாக வாகன சேவையை செய்து வருகிறார்.

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நாள் அன்று முதல் இன்று வரை வரை சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட நிறைமாத கர்ப்பிணி பெண்களை தனது காரில் எப்போதும் இலவசமாக அழைத்துக் கொண்டு மருத்துவமனை சேர்த்துள்ளார் நம்ம லியோ ஆகாஷ் ராஜ்.

Advertisements

அதில் இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட நிறைமாத பெண்களுக்கு குழந்தை பிறந்துள்ளது. தொண்டு நிறுவனம் நடத்தி வரும் நம் லியோ ஆகாஷ் ராஜ், எந்த நேரமாக இருந்தாலும் அழைப்பு வந்தால் உடனடியாக கிளம்பி சென்று தனது உதவி செய்து வருகிறார்.

இது குறித்து லியோ ஆகாஷ் ராஜ் கூறுகையில், ‘இந்த இலவச சேவைக்காக நான் மட்டுமில்லாமல் எனது நெருங்கிய நண்பரின் காரும், பிறகு ஒரு ஆட்டோவையும் நாங்கள் முழுமையாக பயன்படுத்தி வருகிறோம்.

சென்னை முழுவதும் இந்த சேவையை செய்து வரும் நிலையில் ஒரு நாளுக்கு கிட்ட தட்ட 30 அழைப்புகள் வரை எங்களுக்கு வருகிறது’ என பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு சமயத்தில் லியோ ஆகாஷ் ராஜின் சேவையை குறித்து கர்ப்பிணி பெண்கள் கூறுகையில், ‘ஊரடங்கு சமயத்தில் இப்படி ஒரு உதவி என்பது எங்களை போல கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று.

Advertisements

ஆன்லைன் மூலமாக தான் இவரது லியோவின் தொலைபேசி எண் எங்களுக்கு கிடைத்தது. தொடர்பு கொண்டு பேசிய சில மணித்துளிகளில் உடனடியாக வந்து உதவி செய்தார்’ என்கின்றனர்.

மிகவும் கடினமான ஒரு சூழலில் கர்ப்பிணி பெண்களுக்கு லியோ ஆகாஷ் ராஜ் செய்து வரும் இலவச வாகன சேவை மக்களிடையே மிகுந்த பாராட்டைப் பெற்றுள்ளது.

கஷ்டமான சூழலில் உதவி செய்வது கடவுள் போல. சென்னை கர்ப்பிணி பெண்கள் இலவச கார் சேவைக்கு 9600432255/ 7358305635 என்ற எண்ணிற்கு லியோ ஆகாஷ் ராஜை தொடர்பு கொள்ளலாம்.

Advertisements

Related posts