சென்னையில் அவசர கால மருத்துவத் தேவைகளுக்கு இலவச கார்

சென்னை மாநகராட்சி – மகேந்திரா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் ஆகியோர் இணைந்து மருத்துவத் தேவைகளுக்கான ‘அலைட்’ என்ற பெயரில் இலவச கார் சேவையை சென்னையில் தொடங்கியுள்ளன.



மருத்துவம் சார்ந்த தேவைகளுக்காக இலவச கார் சேவையைப் பெற 95000 67082 என்ற செல்பேசி எண்ணில் தொடார்பு கொள்ளலாம்.

Advertisements

யார் யாருக்கு கார் சேவை?

இந்தச் சேவையை மூத்த குடிமக்கள், பிரசவத்தை எதிர்நோக்கியிருக்கும் பெண்கள், மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்காக செல்வோர் , சென்னைக்குள் உள்ள மருந்தகங்களுக்கு மாதாந்திர மருந்துகள் வாங்கச் செல்வோர், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியார்கள் உள்ளிட்டோர் , இந்த இலவச கார் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Advertisements