திங்கட்கிழமை முதல் டோல்கேட்களில் கட்டணம் – மத்திய அரசு தடாலடி அறிவிப்பு

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல் கேட்களில் ஏப்ரல் 20 முதல், மீண்டும் வழக்கம்போல் கட்டணம் வசூலிக்கப்படும் என மத்திய அறிவித்துள்ளது. ஊரடங்கு காலத்தில் டோல் கேட் அடாவடி கட்டணத்தை நிறுத்திவைத்திருந்த மத்திய அரசு, நாளைமறுநாள் முதல் கட்டண வசூலை மீண்டும் தொடங்குகிறது.

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் 21 நாள் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை, மே 3ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இருப்பினும் அதிக பாதிப்பு இல்லாத பகுதிகளில் ஏப்ரல் 20 முதல் நிபந்தனையுடன் சில தளர்வுகள் அளிக்கப்படும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Advertisements


அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதில் ஏற்படும் கால தாமதத்தை தடுக்க, டோல்கேட் கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கடந்த மார்ச் 25ல் மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் வரும் 20ம் தேதி (வரும் திங்கள்) முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்களில் வழக்கம் போல் கட்டணம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

Advertisements