போலி சாமியார் கைது, ஆறாவது திருமணத்திற்கு தயாரான போது சிக்கிய கொடுமை

தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சுஷில்ஹரி பள்ளி நிறுவனர்களில் ஒருவரான சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டுள்ளார்.

இதே போல், யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறும் உத்தரப்பிரதேசத்தில் முறையாக விவாகரத்து பெறாமல், ஐந்து பெண்களை திருமணம் செய்த மற்றொரு பாபா கைதாகி உள்ளார்.

Advertisements

கான்பூரில் தன்னை ‘பாபா’ என அடையாளம் காட்டிக்கொள்ளும் அனுஜ் சேட்டன் கத்தேரியா என்ற சாமியார், 2005 இல் மெயின்புரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தார்.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்திற்கு விண்ணப்பித்தனர். இந்த வழக்கின் விசாரணை, நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பின், 2010 இல், பரேலியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணை அனுஜ் திருமணம் செய்தார். 

இவர்களும் விவாகரத்திற்கு விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து, 2014 இல் அனுஜ் மூன்றாவது திருமணம் செய்தார்.

பின், மூன்றாவது மனைவியின் உறவு பெண்ணை, நான்காவதாக திருமணம் செய்தார். அந்த பெண், முந்தைய திருமணங்கள் குறித்து அறிந்து தற்கொலை செய்து கொண்டார்.

Advertisements

இதையடுத்து, 2019 இல், ஐந்தாவதாக அனுஜ், மேலும் ஒரு பெண்ணை திருமணம் செய்தார். அனுஜ் துன்புறுத்தியதன் காரணமாக, அவர் மீது அந்த பெண், போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, அவரின் மற்ற மனைவியருக்கு இது குறித்த விபரம் தெரியவந்தது.

இதர மனைவியரிடமிருந்து இதுவரை விவாகரத்து முறையாக பெறப்பட வில்லை. எனவே அவர்கள், போலீசாரிடம் புகார் அளித்து உள்ளனர்.

இந்நிலையில் கான்பூரில் வைத்து, போலிசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர், ஆறாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ய இருந்தது தெரியவந்தது. மேலும் பலரை, அவர் தன் வலையில் சிக்க வைத்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 

Advertisements