Facebook நிறுவனம், ரூ43,574 கோடியில் ரிலையன்ஸ் ஜியோ பங்குகளில் முதலீடு

இந்தியாவின் தகவல் தொடர்பு தொழில் தொழில் நுட்ப துறையில் மிகப்பெரிய மிகப்பெரிய ஜாம்பவானாக உலா வரும் நிறுவனம் ரிலையன்ஸ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். ஏர்டெல், வோடாபோன் , ஐடியா , இந்திய அரசின் பி.எஸ்.என்.எல் ஆகிய அனைத்து ஜாம்பவான்களையும் சந்தையில் ஓரம்கட்டி விட்டு குறைந்த விலையில் கிட்டத்தட்ட இந்திய குடிமகன்களின் அனைத்து வீடுகளின் தகவல் தொடர்புகளிலும் கோலோச்சும் நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ உள்ளது.

சமூக வலைதளங்களின் ராஜாவாக பார்க்கப்படுகிறது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற மக்கள் அதிகம் பயன்படுத்தும் செயலிகள் ஃபேஸ்புக் நிறுவத்திற்கு சொந்தமானது ஆகும். இந்தியாவில் பல கோடி மக்கள் இந்த சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

Advertisements

அதேபோல் இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும் தொலைத்தொடர்பு நிறுவனமாக ஜியோவும் உள்ளது. மிகக்குறைந்த விலையில் இண்டர்னெட் சேவை வழங்கியதன் மூலம் அதிக மக்களை சென்றடைந்தது ஜியோ. தற்போது இந்த இரு பெரிய நிறுவனங்களும் கைகோர்த்துள்ளன.

முகேஷ் அம்பானி நிர்வகித்து வரும், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீசின் ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனக் குழுமத்தின் ஒரு பகுதியாக இருக்கும் ஜியோ பிளாட்பார்ம்சின் 10% பங்குகளை ஃபேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது.

இதற்காக ஃபேஸ்புக் ரூ43,574 கோடிஅளவுக்கு முதலீடு செய்துள்ளது.
இதனால் தங்கள் நிறுவனத்தி்ன் மதிப்பு ரூ.4.62 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என ஜியோ தெரிவித்துள்ளது. இரு பெரும் நிறுவனங்கள் இணைந்துள்ளதால் எதிர்காலத்தில் புதிய திட்டங்கள் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

என்றாலும் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருவாய் மற்றும் இலாப பலன்கள் இந்த ஆண்டு குறைந்தே உள்ளது. இந்தியாவில் அதிக சொத்து மதிப்புகள் கொண்டவராக ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி இருந்தாலும் சென்ற ஆண்டை காட்டிலும் நிறுவன சொத்துக்கள் மதிப்பு சிறிது குறைந்தே உள்ளதாக செய்திகள் கூறின.

Advertisements
Advertisements

Related posts