சாப்பிடுங்கள். ஆனால் அவற்றைக் காட்சிப்படுத்தாதீர்கள் – குஷ்பு வேண்டுகோள்

கொரோனா அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையுலகப் பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள்.

ஒரு சிலர் தாங்கள் சமைப்பதை படங்கள், வீடியோக்கள் எடுத்தும் தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

Advertisements

இது தொடர்பாக குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் “தாங்கள் சமைத்ததாகக் கவர்ச்சிகரமான உணவின் புகைப்படங்களைப் பலரும் பதிவிடுவதைப் பார்க்கிறேன்.

நாம் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள், நம் வீட்டில் உணவு சமைக்கப்படுகிறது. இந்தக் கொடுமையான சூழலில் ஒரு வேளை உணவுக்குப் பலரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்குச் சிறிது ஒத்துழைப்பை வழங்குவோம். சாப்பிடுங்கள். ஆனால், அவற்றைக் காட்சிப்படுத்தாதீர்கள்” என பதிவிட்டுள்ளார்.

Advertisements