இறுதி மூச்சு வரை கடமை, கொரோனாவால் உயிரிழந்த 84 வயது செவிலியர்: பேத்தி உருக்கம்

இங்கிலாந்தை சேர்ந்த செவிலியர் ஒருவர் கடைசி மூச்சு இருக்கும் சேவை செய்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வாழ்வா? சாவா? என்ற பணியாற்றி வருகின்றனர்.

Advertisements

இந்த கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் இவர்கள் ஒரு படை வீரர்கள் எனவும் இவர்களின் தியாகம் போர் வீரனுக்கு ஒப்பானது என்றும் புகழப்படுகிறது.

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் காரணமாக தற்போது வரை, 124,743 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மொத்தம் 16,509 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் 449-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் கொரோனா தொற்று காரணமாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போன்றோர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

அந்த வகையில் செவிலியராக இருந்த, இங்கிலாந்தை சேர்ந்த 84 வயது மார்கரெட் டாப்லி என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Advertisements

தன்னுடைய பாட்டி குறித்து பேத்தியான ஹன்னா டாப்லி, நான் செவிலியர் ஆவதற்கு முக்கிய காரணமே என்னுடைய பாட்டி தான் பெருமையாக கூறியுள்ளார்.

மருத்துவப் பேரழிவு என அழைக்கப்படும் கொரோனாவை கண்டு அஞ்சி மார்கரெட் டாப்லி வீட்டில் முடங்கியிருக்கவில்லை. நான் ஒரு செவிலியர் அதன்பின்னர் தான் எல்லாம் என்று தன்னுடைய 84 வயதிலும் மருத்துவ பணியாற்றி வந்துள்ளார்.

இரவு பகல் பாராமல் பணியாற்றி வந்துள்ளார். இறுதியில் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

நான் என் வாழ்க்கையில் சந்தித்த வலிமை மிகுந்த பெண் அவர். துரதிர்ஷ்டவசமாக அவர் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்துவிட்டார். என்னுடைய பெற்றோரைப் போலத்தான் கருதினேன். அவர் இல்லாமல் என்னால் எதையும் செய்ய முடியாது.

அவரை என் பாட்டி எனச் சொல்வதில் எனக்குப் பெருமையாக இருக்கிறது. அவர் கடினமான உழைப்பாளி அதேநேரத்தில் அனைவரின் மீது அக்கறை கொண்டவர்.

தன் வாழ்க்கையை மற்றவர்களுக்காக அர்ப்பணித்துள்ளார். தினமும் மெசேஜ் இல்லையென்றால் போனில் எதாவது பேசுவார். நான் அவரை மிஸ் செய்கிறேன்.

என்னுடைய மிகப்பெரிய ரசிகை அவர் நான் செய்யும் எல்லாவற்றிலும் எனக்கு ஆதரவாக இருந்தார். இந்தச் சூழலுக்கு நான் எப்படி மாறுவேன் எனத் தெரியவில்லை.

எங்கிருந்தாலும் அவர் என்னையும் எங்களது குடும்பத்தையும் பார்த்துக்கொண்டிருப்பார் என்று நம்புவதாக ஹன்னா டாப்லி உருக்கமாக கூறியுள்ளார்.

Advertisements