ஊரடங்கை மீறுபவர்களை அவமரியாதையாக நடத்தக் கூடாது : D.G.P. திரிபாதி

ஊரடங்கை மீறுபவர்களை அவமரியாதையாக நடத்தக் கூடாது : D.G.P. திரிபாதி

கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கை மீறி வெளியே நடமாடுபவர்களை ஒருபோதும் அவமரியாதையாக நடத்தக் கூடாது என்று போலீசாரை டிஜிபி திரிபாதி கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் நடந்த காவல் துறை உயர்அதிகாரிகளுடன் நடந்த கூட்டத்தில் டிஜிபி திரிபாதி கலந்து கொண்டார்.

Advertisements

கூட்டத்தில் பேசிய திரிபாதி கூறியதாவது : “ஊரடங்கை மீறுபவர்களை கட்டுப்படுத்தும் விதமாக போலீசார் அவர்களை அவமரியாதையாக நடத்தக்கூடாது. தவிர்க்க முடியாத காரணங்களினால்தான் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருகின்றனர். எனவே அப்படி வெளியே வருபவர்களிடம் கொரோனா அபாயத்தை எடுத்துக் கூறி அவர்களை அனுப்பி வையுங்கள். பைக்குகளில் வருபவர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். விசாரணையின் போது சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும்” இவ்வாறு டிஜிபி திரிபாதி அறிவுரை கூறினார்.

Advertisements