கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் அவசரம் வேண்டாம், உலக சுகாதார மையம் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதை தளர்த்துவதில் அவசரம் காட்ட வேண்டாம் என்று  உலக சுகாதார மையத்தின் மேற்கு பசிபிக் பிராந்திய இயக்குனர் டாக்டர் டகேஷி கசாய் தெரிவித்து உள்ளார்.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இன்று 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி, நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தற்போதைய நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டிவிட்டது. பலியானோர் எண்ணிக்கை 1லட்சத்து 70 ஆயிரத்தை கடந்து விட்டது.சீனாவில் கொரோனா தாக்கம் குறைந்து இயல்புநிலை திரும்பி உள்ளது. அதுபோல இந்தியா உள்பட பல ஐரோப்பிய நாடுகளிலும் இயல்பு நிலை திரும்பும் வகையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது.

Advertisements

கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தலை தூக்கும் என்பதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அவசரப்பட்டு தளர்த்த வேண்டாம் என்று உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. படிப்படியாக தொழிற்சாலைகள் திறக்கப்பட்டு வருகின்றன. அரசு அலுவலகங்கள் செயல்பட தொடங்கி உள்ளன.

உலகிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள அமெரிக்காவிலும் பல மாநிங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன.  இதன் காரணமாக கொரோனா தொற்று மீண்டும் பரவ வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதாரத்துறையின் மேற்கு பசிபிக் பிராந்திய இயக்குனர்,  இது மெத்தனமாக இருப்பதற்கான நேரம் அல்ல. எதிர்காலத்துக்கான புதிய வாழ்க்கை பாதைக்கு தயாராக வேண்டிய நேரம். கொரோனாவை கட்டுப்படுத்துவதில், அரசுகள் விழிப்புடன் செயல்பட வேண்டும். ஊரடங்கு கட்டுப்பாடுகளை அவசரப்பட்டு தளர்த்த வேண்டாம்.

அது, கொரோனா பரவலை  மீண்டும் தலைதூக்க செய்து விடும். கட்டுப்பாடுகள், சமூக விலகல் ஆகியவற்றை தளர்த்துவது படிப்படியாக நடக்க வேண்டும். மக்களின் ஆரோக்கியத்தையும், பொருளாதார வளர்ச்சியையும் சமச்சீராக பராமரிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisements
Advertisements

Related posts