ஊரடங்கை தளர்த்தி விடாதீர்கள், மீண்டும் வைரஸ் தாக்கும் :உலக சுகாதார அமைப்பு

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். . சிகிச்சை பெறுபவர்களில் சுமார் 50,000 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. 3 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

Advertisements

வைரசை கட்டுப்படுத்த இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. அத்தியாவசிய காரணங்களை தவிர மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியது, உலக நாடுகள் அமல்படுத்தியுள்ள ஊரடங்கை தளர்த்துவதால் வைரஸ் மறு எழுச்சிக்கு வழிவகுக்கும். ”ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ள சில நாடுகள் ஏற்கனவே மக்கள் வீடுகளிலேயே இருக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. கட்டுப்பாடுகளை திறம்பட நிர்வகிக்கத்தவறினால் மாறுபாடான எதிர்மறை விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்றார்

Advertisements

Related posts