அத்திவரதரை மீண்டும் குளத்திற்கு அடியில் வைக்கக் கூடாது -ஜீயர் கோரிக்கை

அத்திவரதரை மீண்டும் குளத்திற்கு அடியில் வைக்கக் கூடாது -ஜீயர் கோரிக்கை

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் சுமார் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்தி மரத்தால் செய்யப்பட்ட அத்திவரத பெருமாள் பக்தர்களுக்கு தரிசனம் தருவது வழக்கம்.

Advertisements

அந்த வகையில் இந்தாண்டு ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை அத்திவரதர் தரிசனத்திற்கு கோயில் நிற்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில் அத்திவரதரை மீண்டும் குளத்திற்கு அடியில் வைக்கக் கூடாது என்று ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜீயர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர், “கடந்த காலங்களில் திருட்டிற்கு பயந்து அத்திவரதரை நீருக்கு அடியில் வைத்தனர். 40 ஆண்டுகளுக்கு பிறகு வெளியில் வந்த அத்திவரதரை மீண்டும் புதைக்கத் தேவையில்லை.

அத்திவரதரை பூமிக்கு அடியில் புதைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி அனைத்து மடாதிபதிகளும் முதல்வர் பழனிசாமியிடம் கோரிக்கை வைக்கவுள்ளோம்” என்று கூறியுள்ளார்.

Advertisements