கடலுக்குள் வாழும் 8 மீட்டர் நீளமான பிரமாண்ட கடற் புழு ! அதிர்ச்சியில் ஆய்வாளர்கள் !

நியூசிலாந்து கடல் ஆய்வாளர்கள் ஸடீவ் ஹாத்வே , அன்ரூ பட்லே ஆகியோர் எரிமலையால் தோன்றிய வெள்ளைத் தீவுப் பகுதி கடற்பரப்பில் நீருக்குள் ஆய்வுகளை மேற்கொண்டிருந்த போது, மிகவும் பிரம்மாண்ட அளவுடைய இராட்சத கடற் புழு ஒன்றைக் கண்டு ஆச்சரியமடைந்துள்ளனர்.

வெள்ளை நிறத்தில் வழுவழுப்பாக காணப்பட்ட அதன் தலைப் பகுதி தட்டையாக முட்கள் போன்ற அமைப்புடன் காணப்பட்டுள்ளது.

Advertisements

அப்புழு தண்ணீரில் நடுங்கியபடி சுழன்ற காட்சியை அவர்கள் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர். இது போன்ற ஓர் உயிரினம் உள்ளதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கவில்லை என்று குறிப்பிடும் அவர்கள் இது ஜெல்லி பிஸ் வகையைச் சேர்ந்ததாக இருக்கும் என்று குறிப்பிடுகின்றனர்.

Advertisements

Related posts