ஊரடங்கு, ஜூன் 1 வரை நீட்டிக்கப்படுமா – முதல்வர்களுடன் பேசுகிறார் பிரதமர்

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாநில முதல்வர்களுடன் வரும் 27-ம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில், ஜூன் 1 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்று பல மாநிலங்கள் கோரிக்கைவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்படைந்து வருகிறது. தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து, அனைத்து நாடுகளும் கொரோனா வைரசில் இருந்து காத்துக்கொள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன.

Advertisements

இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு மே 3 வரை நீட்டிக்கப்பåட்டு உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20, 471 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 652-ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல் மந்திரிகளுடனும் பிரதமர் மோடி வரும் 27-ம் தேதி வீடியோ கான்பரன்சில் மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பல்வேறு நாடுகளும் ஊரடங்கு காலத்தை ஜூன் வரை நீட்டித்துள்ளன. இந்தியாவில் மே மாதம்தான் கொரோனா தாக்குதல் உச்சநிலை அடையும் என வைராலஜி நிபுணர்கள் கூறிவருவதால், இந்த கூட்டத்தில், ஜூன் 1 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்று பல மாநிலங்கள் கோரிக்கைவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements