சிங்கப்பூரில் ஜூன் ஒன்றாம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – இந்தியாவில் என்ன ஆகும்?

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் சிங்கப்பூரில் விதிக்கப்பட்ட ஊரடங்கு ஜூன் ஒன்றாம் தேதி வரை நீடிக்கப்படுவதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் ஒரு மாதத்துக்கு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் தெரிவித்திருந்தார்.

Advertisements

அப்போது அவர் பேசுகையில், ”அதிகரித்து வரும் தொற்று நோயைத் தடுப்பதற்கு ஒரு தீர்க்கமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

பொழுதுபோக்கு அரங்குகள், கல்வி நிறுவனங்கள் ஆகிய அனைத்தும் மூடப்படும். சந்தைகள், மருந்துக் கடைகள், போக்குவரத்து, வணிக நிறுவனங்கள் ஆகியவை தொடர்ந்து திறந்திருக்கும். மறு உபயோகம் செய்யக் கூடிய முகக் கவசங்களை பொதுமக்களுக்கு அரசு அளிக்கும்’ என்று லீ செய்ன் லூங் தெரிவித்தார்.

தற்போது சிங்கப்பூரில் விதிக்கப்பட்ட ஊரடங்கு ஜூன் ஒன்றாம் தேதி வரை நீடிக்கப்படுவதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் அடங்கும்வரை மற்ற நாடுகள் ஊரடங்கு காலத்தை நீட்டித்துவரும் நிலையில், இந்தியாவில் என்ன ஆகுமோ என்ற கவலை எழுந்துள்ளது. வைரஸ் பரவலின் தாக்கம் மே 3 ஆம் தேதிக்குள் கட்டுக்குள் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

Advertisements
Advertisements