கச்சா எண்ணெய் விலை, வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் விலை குறைக்க, மனது வைப்பாரா மோடி?

கொரோனா பாதிப்பு காரணமாக, நேற்று நியூயார்க் பங்கு பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே கச்சா எண்ணெயையை விலைக்கு வாங்க யாரும் தயாரில்லை. இதனால் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் பூஜ்ஜியம் டாலருக்கும் கீழ் சென்றது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார செயல்பாடுகள் முடங்கியுள்ளன, வர்த்தகம், சுற்றுலா, போக்குவரத்து அனைத்தும் கரோனா காரணமாக முடங்கியுள்ளதால் பெட்ரோல், டீசலின் தேவை பெருமளவு குறைந்துள்ளது.

Advertisements

உலக அளவில் பொருளாதார செயல்பாடுகள் நின்றுவிட்டதால் உற்பத்தியான கச்சா எண்ணெயை வாங்க நிறுவனங்கள் முன்வரவில்லை. இதனால் அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் முதல் முறையாக கச்சா எண்ணெய் பூஜ்ஜியம் டாலருக்கும் கீழ் சென்று உள்ளது.

நேற்று நியூயார்க் பங்கு பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே கச்சா எண்ணெயையை விலைக்கு வாங்க யாரும் தயாரில்லை -35.34 டாலருக்கு விற்பனையாகி பின்னர் மோசமாக -53.61 டாலராக வீழ்ச்சி அடைந்து இறுதியாக 18.27 டாலர்களில் முடிந்தது. வர்த்தகத்தில் நேற்று ஒரே நாளில் கச்சா எண்ணெய் -40.32 டாலர்கள் சரிவைச் சந்தித்தது.

இந்த விலைச் சரிவால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை, பாதிக்கும் கீழ் குறைவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் மத்திய அரசு மனதுவைக்குமா என்பது தெரியவில்லை.

Advertisements