உலகம் முழுவதும் 204 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸ்

உலகம் முழுவதும் 204 நாடுகளுக்கு பரவியுள்ள வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. 

தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

Advertisements

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. 

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 10 லட்சத்து 940 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 7 லட்சத்து 39 ஆயிரத்து 321 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சிகிச்சை பெறுபவர்களில் 37 ஆயிரத்து 702 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 51 ஆயிரத்து 375 பேர் உயிரிழந்துள்ளனர். 

Advertisements

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 244 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்

Advertisements