அமெரிக்காவில் முதல் முறையாக வளர்ப்பு பூனைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

அமெரிக்காவில் முதல் முறையாக செல்லப்பிராணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நியூயார்க் நகரில் உள்ள இரண்டு வீடுகளில் வளர்க்கப்படும் இரண்டு பூனைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

பூனைகளுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால் விரைவில் குணமடையும் என்றும் அதிகாரிகள் கூறி உள்ளனர். ஆனால் அந்த வீடுகளில் உள்ளவர்களில் யாருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை. எனினும் செல்லப் பிராணிகளை வளர்ப்போருக்கு இந்த செய்தி அச்சத்தை உருவாக்கியிருக்கிறது.

Advertisements

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று பிற்பகல் நிலவரப்படி நியூயார்க்கில் 2 லட்சத்து 58 ஆயிரத்து 689 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 15 ஆயிரத்து 302 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisements