தருமபுரி மாவட்டத்திலும் நுழைந்தது கொரோனா தொற்று! ஓட்டுநருக்கு உறுதியானதாக அறிவிப்பு

ருமபுரி மாவட்டத்தில் முதல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 35 வயது ஓட்டுனர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. அதன் எதிரொலியாக சுகாதார தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரம் அடைந்துள்ளன. சென்னை, கோவை ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகம் காணப்படுகிறது.

Advertisements

தமிழகத்தில் தான் இவ்விரு மாவட்டங்கள் முதலிரண்டு இடத்தில் இருக்கிறது. இதுவரை கொரோனா பாதிக்காத மாவட்டம் என்று பெயர் எடுத்திருந்தது தருமபுரி மாவட்டம். இப்போது அந்த மாவட்டத்திலும் முதல் கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.

அந்த மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயது ஓட்டுநர் ஒருவருக்கு கொரோனா தொற்று பரவி இருக்கிறது. அவரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் இது உறுதியாக உள்ளது.

தருமபுரி மாவட்டமானது, கிழக்கு பகுதியில் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டம், மேற்கு பகுதியில் கர்நாடகா மாநிலமும் , வடக்கு பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்டம், தெற்கு பகுதியில் சேலம் மாவட்டங்களால் சூழப்பட்டுள்ளது. ஆகையால், சுகாதார தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisements