சீன ஆய்வகத்தில் இருந்து பரவியதா கொரோனா வைரஸ். வெளியான திடுக்கிட வைக்கும் புகைப்பட ஆதாரங்கள்

உலக நாடுகள் அனைத்தையும் நடுநடுங்க வைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகமாகி லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கிக்கொண்டிருக்கின்றது.

குறித்த வைரஸ் சீனாவில் வூஹான் மாகாணத்தில் கடல்உணவு சந்தையிலிருந்து பரவியுள்ளது என்று கூறப்பட்டு வந்த நிலையில், குறித்த வைரஸ் வூஹான் மாகாணத்தில் இருக்கும் ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது என்று பல நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றது.

Advertisements

இந்நிலையில் சீன ஆய்வுக்கூடத்தில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளில் கொரோனா வைரஸ் உட்பட 1500 வைரஸ்களின் மாதிரிகள் திறந்துவைக்கப்பட்ட நிலையில் காணப்படும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல China Daily பத்திரிகை மூலம் 2018ல் வெளியிடப்பட்ட நிலையில் கடந்த மார்ச் மாதம் அதன் அதிகாரபூர்வ டுவிட்டரில் வெளியிடப்பட்டு பின்னர் அழிக்கப்பட்ட நிலையில், தற்போது இப்புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பெரும் பரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த குளிர்சாதனப்பெட்டியின் கதவுகள் உடைந்த நிலையில், இதில் வவ்வால் கொரோனா வைரஸ் மாதிரிகள் இருந்துள்ளது என்றும் அந்த வைரஸ் லீக்காகி இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

இது குறித்து அமெரிக்க புலனாய்வு துறை தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் வெடிப்பு தொடங்கிய சிறிது நேரத்திலேயே, ஆய்வகத்தின் அதிகாரிகள் வைரஸின் மாதிரிகளை அழித்தது மட்டுமின்றி, ஆரம்ப அறிக்கைகள் மற்றும் மிகைப்படுத்தப்பட்ட கல்வித் தாள்களையும் அழித்துள்ளனர்.

Advertisements

பின்னர் வுகானின் சந்தையில் உள்ள விலங்குகள் மூலம் கொரோனா பரவியதாக குற்றம் சாட்ட முயன்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே குறித்த கொரோனா வைரஸ் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்று கூறி வரும் நிலையில், சீனாவில் உண்மையைக் கூறிய பலரும் காணாமல் போனது சந்தேகத்தினை அதிகரித்த நிலையில், குறித்த புகைப்படம் இன்னும் அதிகமாக சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

Advertisements