தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா – பாதிக்கப்பட்டோர் 1267

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1267 ஆக அதிகரித்துள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 1-ம் தேதி முதல் கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Advertisements

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இதற்கிடையே, தமிழக அரசு நேற்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1242 ஆக இருந்தது.


இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1267 ஆக அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் கொரோனா வைரசால் இன்று மேலும் 25 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1267 ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

Advertisements
Advertisements

Related posts