தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் 1075 பேர்

தமிழகத்தில் இன்று மேலும் 106 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது என தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்
தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 1000த்தை கடந்து, மொத்தம் 1075 ஆக உயர்ந்தது.

Advertisements

சென்னையில் மேலும்18 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது.

திருப்பூரில் இன்று ஒரே நாளில் 35 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. மொத்த எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.

கோவையில் 22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்கள் 11 பேர்.

Advertisements

தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள் 50 பேர்.

இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

Advertisements

Related posts