பிரான்ஸில் வீதிகளை சுத்தப்படுத்தும் தண்ணீரில் கொரோனா வைரஸ்

தொற்றுநோயின் விளைவாக 20,000 க்கும் மேற்பட்ட இறப்புகளைப் பதிவுசெய்துள்ள பிரான்ஸ் . உலகிலேயே நான்காவது மிக அதிகமான பலி எண்ணிக்கையைக் கொண்டுள்ளது . கிட்டத்தட்ட ஐந்து வாரங்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் சீன் நதி மற்றும் எவர்க் கால்வாயிலிருந்து எடுக்கப்பட்ட தண்ணீர், வீதிகளை சுத்தம் செய்வதற்கும், நகரத்தின் பூங்காக்கள் மற்றும் தோட்டங்களுக்கு நீர் வழங்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. தற்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்ப்படுவது இல்லை. இந்த நீர் அலங்கார நீர் ஊற்றுகளுக்கும் வழங்கப்படுகிறது.

Advertisements

இந்த நீரில் புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, ஆனால் குடிநீர் மாசுபடுவதற்கான ஆபத்து இல்லை என்று நகர அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாரிஸ் நீர் அதிகாரசபையின் ஆய்வகம் தலைநகரைச் சுற்றி சேகரிக்கப்பட்ட 27 மாதிரிகளில் நான்கில் சிறிய அளவிலான வைரஸைக் கண்டறிந்தது, இது ஒரு முன்னெச்சரிக்கையாக வலையமைப்பை உடனடியாக நிறுத்த வழிவகுத்தது என செலியா பிளேவல் ஏப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

Advertisements