தர்மபுரி எலவடை கிராமத்தில் கொரோனா சோதனை

தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியத்துக்குட்பட்ட கொசப்பட்டி ஊராட்சியில் உள்ள எலவடை கிராமத்தில் நேற்று லாரி ஓட்டுநருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து லாரி ஓட்டுநர் உட்பட 4 பேரை ஆம்புலன்ஸ் மூலமாக தர்மபுரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில், நோய் தொற்று யாருக்காவது பரவியுள்ளதா என்பதை கண்டறிய எலவடை கிராமத்தில் உள்ள அனைவருக்கும் மருத்துவர்கள் கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். இந்த பரிசோதனையின்போது மக்கள் அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து நின்று பரிசோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.

Advertisements
Advertisements