கொரோனா: மற்ற நாடுகளைவிட இந்தியாவில் பரவல் குறைவு என கணிப்பு

கொரோனா: மற்ற நாடுகளைவிட இந்தியாவில் பரவல் குறைவு என கணிப்பு

கொரோனா பரவலில் கடந்த ஒரு மாதத்தில் மற்ற நாடுகளை விட இந்தியா குறைவான இடத்திலேயே இருப்பதாக சென்னை கணித அறிவியல் கல்வி நிறுவன புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

Advertisements

மார்ச் 17-ஆம் தேதி நிலவரப்படி கொரோனா பாதித்த ஒருவரின் தொற்று மற்றொருவருக்கு பரவுவது 1.7 ஆக இருந்த நிலையில், மார்ச் 26-ஆம் தேதி அது 1.81 ஆக அதிகரித்தது.

இதே காலத்தில் உலகில் சராசரியாக கொரோனா தொற்று பரவல் ஒருவரிடமிருந்து 2 முதல் 3 பேராக இருந்தது.

அதேநேரம் மார்ச் மாதத் தொடக்கத்தில் 3ஆக இருந்த தொற்று எண்ணிக்கை மாத இறுதியில் ஆயிரத்துக்கு மேலாக உயர்ந்தது.

எனினும், ஸ்பெயின், இத்தாலி, தென்கொரியா, அமெரிக்கா நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்த உயர்வு மிக சமநிலையான ஒன்றாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Advertisements

கொரோனா தொற்று மட்டுமின்றி உயிரிழப்பிலும் இந்தியா மற்ற நாடுகளைவிட மிகவும் குறைந்த நிலையிலேயே நீடிப்பதாக அந்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

முதல் வாரத்தில் 3ல் இருந்து 43 ஆக இருந்த கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை, அடுத்த வாரத்தில் 114 ஆகவும், மார்ச் 29ஆம் தேதி 1071 ஆகவும் அதிகரித்தன.

Advertisements

Related posts